He did his post graduation in Sri Ramachandra Medical College & Research Institute.After that he worked as Assistant Professor in SRM Medical Research Centre (SRM MRC).Now he is a Consultant Orthopaedics Surgeon & Managing Director at Bloom healthcare.He has played a pivotal role in establishing and steering Bloom healthcare forward
டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி திராவிட சிந்தனையாளர் குடும்பப் பின்னணி, அவருக்கு வெகு இயல்பாக திராவிட கருத்தியல் அறிமுகத்தை அவரது மழலை பருவந் தொட்டே சாத்தியமாக்கியது . எனவே அவரது பள்ளிப் பருவந் தொட்டே திராவிட முன்னேற்றக் கழக செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவராக, பங்கேற்பவராக ஆக்கியது. அண்ணாமலை பல்கலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக் காலங்கள் திமுக மாணவரணி செயல்பாடுகளில் முன்னிலை ஏற்க வாய்ப்பளித்தது. சென்னை ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு , எம் . எஸ் ( ஆர்த்தோ) படித்த காலம் , திமுக இளைஞரணியின் முன்னணி தொண்டராகும் அரிய வாய்ப்பை வழங்கியது. அன்றைய இளைஞரணி தலைவர் , இன்றைய திமுகவின் ஆற்றல் மிகு தலைவர் தளபதி மு. க . ஸ்டாலின், அவர்களின் கடுமையான உழைப்பு அவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த ஈர்ப்பின் விளைவால் விழுப்புரத்தில் 2003 ஆண்டில் உருவானது , “தளபதி நற்பணி மன்றம் ‘. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் காலம் நெடுக அதன் தீவிர செயல்பாடுகள் இருவேறு தளங்களில் இயக்கம் கொள்வதையே அதன் வழிமுறையாக கொண்டிருந்தது. முதலும் அதி முக்கியமானதும் நேரடியான கழக இயக்கச் செயல்பாடுகள். அது இயக்கச் செயல்பாட்டாளரை எளிய மக்கள் தொகுதியினூடாக திரளச் செய்வது, திரண்டவரை, ஒருமுகப்படுத்தி இயக்கமயமாக்கி முன்னகர்த்துவது என்பதாகும். இன்னொரு தளம் சமூக /பண்பாட்டுத் தளத்தில் வெகுமக்கள் வெளியில் இயக்க சிந்தனைகளை, அதன் நோக்கங்களை பரப்புவது. இந்தப் பணியை , திமுக துவங்கப்பட்ட காலந்தொட்டே, இயக்கத்தின் துணை அமைப்புகளே நிகழ்த்தி சாதனை நிகழ்த்தின. இது ஒரு விரிந்த தளம் . கலை இலக்கியம் , நாடகங்கள், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு என்ற பெரும் பரப்பு. இந்த சமூக பண்பாட்டு நடவடிக்கைகளில், கௌதம சிகாமணி அவர்கள் உருவாக்கி,ஒருங்கிணைத்து தலைமை ஏற்ற ‘தளபதி நற்பணி மன்றத்தின் ‘ தேர்வு விளையாட்டு மற்றும் மருந்துவம் சார்ந்ததாக இருந்தது இயல்பானதே. காரணம் அவரே ஒரு விளையாட்டு வீரர் , கல்லூரி அளவிலான, மருத்துவ கல்லூரிகளுக்கிடையிலான போட்டி விளையாட்டுகளில் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து அணிகளில் விளையாடியவர். மருத்துவம் அவரது கல்விப்புலம் சார்ந்த துறை. 2003 துவங்கி இன்றளவும் வலுவாக இயங்கி வரும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் பல பல . அவற்றில் முக்கியம் கருதி தகவல்கள் கீழே .
* 2003 - ஆம் ஆண்டு தளபதி நற்பணி மன்றம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கிளைகள் துவக்கி பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்தது.
* 2004 - ஆம் ஆண்டு தளபதியின் 52 - ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி நற்பணி மன்றம் சார்பில் மாநில அளவிலான இறகு பந்தாட்ட போட்டியினை நடத்தி திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு அளித்து கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.
* 2010 - ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டியை நடத்தி அன்றைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.நெப்போலியன் அவர்களை சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டது.
* மாநில அளவிலான கைப்பந்து கழகத்திற்கு செயல் தலைவராக பொறுப்பேற்று சென்னை மெரினாவில் அகில உலக கடற்கரை கைப்பந்து போட்டியினை நடத்தியது.
* ஒவ்வொரு வருடமும் தளபதி பிறந்தநாள் விழாவின்போது மாநில அளவிலான இறகுப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபாடி, கால்பந்து, ஹாக்கி மற்றும் கராத்தே போட்டிகளை சிறப்பாக நடத்தியது.
* ஒவ்வொரு வருடமும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகக் கொடியை ஏற்றி மக்கள் நலப்பணிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், பொது மக்களுக்கு மருத்துவ முகாம்களின் மூலம் இரத்த தானம், முழு உடல் பரிசோதனை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியது.
* மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லம், உடல் ஊனமுற்றோர் இல்லம், அனாதை இல்லம் ஆகியவற்றிற்கு பல்வேறு உதவிகளை செய்தது.
பொறுப்புகளின் விபரங்கள்
* தலைவர் - மாவட்ட தளபதி நற்பணி மன்றம்
* செயல் தலைவர் - தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம்
* தலைவர் - மாவட்ட கைப்பந்து கழகம்
* கௌரவ தலைவர் - மாவட்ட இறகுபந்து கழகம்
* தலைவர் - மாவட்ட ஹாக்கி கழகம்